top of page

அன்புள்ள குடியிருப்பாளர்களே! வணக்கம்,

பல ஆண்டுகளாக, புக்கிட் கோம்பாக் என்ற இந்த தனிஅடையாளமாக விளங்கும் எஸ்டேட்டில் வாழும் பலருக்கு இது ஒரு பசுமையான அழகான இல்லமாக உருவாகிவிட்டது. இன்று, கொரோனாக் கிருமிப் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் கூட நாம் வளர்ந்து வலுவாக நிற்கிறோம்.

 

நாம் கடந்த ஐந்து ஆண்டு காலமாகப் பல எஸ்டேட் மேம்பாடுகளைப் பார்த்துள்ளோம். சன்ஷைன், குய்லின் மற்றும் ஹில்குரோவ் போன்ற பழைய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் (HIP) கீழ் புதுப்பிக்கப்பட்ட வீடுகளைப் பயன்படுத்தி மகிழ்கின்றனர். நமது பாதுகாப்பளிக்கப்பட்ட ஊடுபாதை நெட்வொர்க்கையும் நன்கு விரிவுபடுத்தியுள்ளோம். மேலும் அருகாமை இடத்தைச் சுற்றி 2,000 மீட்டருக்கும் அதிகமான பாதுகாப்பளிக்கப்பட்ட ஊடுபாதைகளைச் சேர்த்துள்ளோம். குடியிருப்பாளர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து கொள்வதற்கும், புதிய திறன்களைக் கற்று மேம்படுவதற்கும் புதிய இடங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளனர். ஹில்வியூ சமூக மன்றம், சுற்றுச்சூழலுக்குப் பொருத்தமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது; மற்றும் எல்லா வயதினருக்கும் திறன் வளப்படுத்தல் பாடத்திட்டங்களை வழங்குகிறது - அதாவது குழந்தைகளின் கலை வகுப்புகள் முதல் பல எதிர்காலத்திற்கான திறன்வளர்ப்பு (SkillsFuture) பாடங்கள் வரை. புக்கிட் கோம்பாக் பூங்காவும் கூட இந்த ஆண்டு உங்களுடைய பயன்பாட்டிற்குக் கிடைக்கவுள்ளது. அச்சில மேம்பாட்டு அம்சங்களில் ஒரு சமூகத் தோட்டம், ஒரு கஃபே மற்றும் நாய்களுக்கான பயிற்சியிடமும் கூட அடங்குகின்றன. அதைப் பார்த்துப் பயன்படுத்த மறக்காதீர்கள்!

 

இந்தப் புதிய மற்றும் மேம்பட்ட வசதிகளை நாம் அனுபவிக்கும் போது நாம் அனைவரும் ஒன்றினைந்த இதயம் இல்லாமல் ஓர் இல்லம் இருக்க முடியாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்கும், நமது பராமரிப்பு மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களை ஆதரிப்பதற்கும் நமது சமூகம் எவ்வாறு ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளது என்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நமது எஸ்டேட்டில் பணிபுரியும் சுமார் 720 சுகாதார மற்றும் போக்குவரத்து முன் வரிசைப் பணியாளர்களுக்குப் பராமரிப்புப் பொதிகளை வழங்க, புக்கிட் கோம்பாக்கைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினர், பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் அடித்தள அமைப்புகளின் தன்னார்வலர்கள் கைகோர்த்தனர். பள்ளி மாணவர்களிடமிருந்து பழங்கள், கறி பஃப்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகள் போன்ற பொருட்களை உள்ளடக்கிய பரிசுகள், நமது சமூகம் எவ்வாறு ஒருவருக்கொருவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறது என்பதற்கான அடையாளமாகும். இவ்வாறுதான் நாம் கோவிட் 19-ஐ நாம் கடந்துசெல்வோம் - அதாவது வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதன் மூலம்.

 

நாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்போது, நானும் எனது குழுவும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் இருந்தாலும் குடியிருப்பாளர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு எடுசேவ் விருதுகள் வழங்கல் அமர்வை எங்களால் நடத்த முடியவில்லை என்றாலும், சான்றிதழையும் அவர்களுக்கான தனிப்பட்ட குறிப்பொன்றையும் விருது பெற்றவர்களுக்கு தபாலில் அனுப்பினோம். தொடர்பு துண்டிப்பைத் (Circuit Breaker) தொடங்குவதற்கு முன்பு, சில மாணவர்கள் என்னிடமிருந்து தனிப்பட்ட முறையில் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றனர். 

 

நாம் புதிய சாகாப்தத்திற்குள் செல்லும் இத்தருணத்தில், நானும் எனது குழுவும் எஸ்டேட்டை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளைத் தொடர்வதோடு, நமது சமூகத்தை ஒன்றிணைத்து பலப்படுத்தவும் செய்வோம். ஒன்றாக, புக்கிட் கோம்பாக்கை ஒரு வீடாகவும், நாம் விரும்பும் பெருமை வாய்ந்த இடமாகவும் மாற்றுவோம், இங்கு ஒவ்வொரு நபரும் முக்கியத்துவம் பெறுகிறார்கள், எவரும் கவனிக்காமல் விடப்படமாட்டார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

Signature.jpg

லாவ் யென் லிங்

bottom of page